விரைவு வரி சேவை நிறுவனம்

உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது

வருமான வரி தொடர்புடைய அனைத்து தேவைகளுக்கும் நிகழ் நிலையில் தீர்வுகள்!

சம்பள பட்டுவாடா அதிகாரிகளுக்காக!

வருமான வரி பிடித்தம் தாக்கல்

மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் வருமான வரி துறைக்கு சம்பள பட்டுவாடா அதிகாரி மின்னணு முறையில்(E-TDS) படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் 200 அபராதம் செலுத்த நேரிடும்.
அரசாங்க ஊழியர்களுக்காக!

தனிநபர் வருமான வரி படிவம் தாக்கல்

ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் சம்பள பட்டுவாடா அதிகாரியிடம் படிவம் 16-னை பெற்று, வருமான வரி துறைக்கு வருமான வரி படிவத்தை (ITR 1 or ITR 2) ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் ரூபாய் 1000/-, 5000/- அல்லது 10,000/- அபராதம் செலுத்த நேரிடும்.

நாங்கள்!
பட்டய கணக்காளர்கள் , வரி ஆலோசகர்கள் மற்றும் மென் பொறியாளர்கள்.
எங்கள் அனுபவம்!
நாங்கள் அரசாங்க துறைகள் பலவற்றில் தணிக்கையாளர்களாக பணியாற்றியுள்ளோம். அரசாங்க துறைகளில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரி (TDS) முழுமையாக ஊழியர்களின் நிரந்தர கணக்கு எண்ணுக்கு( PAN) செல்வதற்குள்ள பல இடற்பாடுகளை எங்களின் அனுபவத்தினால் களைத்து, முறையாக படிவம் தாக்கல்(24Q) செய்வதற்க்கு உதவியுள்ளோம்.
agenta
நோக்கம்
  • அரசாங்கத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிகளை, மின்னணு முறையில்(e-tds) முறையாக ஒவ்வொரு காலாண்டிலும் தாக்கல் செய்தல்.
  • படிவம் 16-னை(Form 16) வருமான வரித் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தல்.
  • ஊழியர்கள் அனைவரும் தங்கள் தனிநபர் வருமான வரி படிவத்தினை(ITR 1 and 2) வரும் 31 ஜூலை 2018குள் மின்னணு தாக்கல் செய்துள்ளதை உறுதி செய்தல்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளும், ஊழியர்களும் வரி தவறியவர்கள் அல்ல என்ற வருமான வரி துறையின் பாராட்டுக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் குறிகோள்.
சேவைகள்
நாங்கள் இந்த இணையதளத்தை இரண்டாக பிரித்துள்ளோம். ஒன்று, துறைகளுக்கான வரி பிடித்தம் தாக்கல் (Organisation e-TDS return), மற்றொன்று ஊழியர்களின் தனிநபர் வருமான வரி படிவம் தாக்கல்(Individual Income Tax Return).

துறைகளுக்கான வரி பிடித்தம் தாக்கல் (Organisation e-TDS Return)

  • நீங்கள் ஊழியர்களின் நிரந்தர கணக்கு எண்ணுடன்(PAN) சம்பளம்(GROSS SALARY) மற்றும் வரி(TAX WITH CESS) தகவலை பகிர்ந்தால் போதும்.
  • நாங்கள் வரி பரிமாற்றம்(BOOK TRANSFER) அடைந்த தகவல்களை (BIN AND DDO Serial No.) கருவூலத்தின் மூலம் பெற்று அவற்றை சரிபார்த்து,
  • படிவம்(FORM 24Q)-யை இறுதி தேதிக்கு முன்னராக தாக்கல் செய்து உடனடியாக இரசீதினை(PROVISIONAL RECEIPT) உங்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்து விடுவோம்.
  • நான்கு காலாண்டும் செய்த பிறகு படிவம் 16-னையும்(FORM 16) நீங்கள் நம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தனிநபர் வருமான வரி படிவம் தாக்கல் (Individual Income Tax Return)

  • சம்பள பட்டுவாடா அதிகாரியிடம் படிவம் 16-னை(Form 16) பெற்ற பின்னர் ஊழியர்கள் அனைவரும் தனிப்பட்ட வருமான வரி படிவத்தை(ITR 1 or 2) வருமான வரி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  • படிவம் 16-ல் விடுபட்ட பிற வருமானங்களை (சரிபார்க்க படிவம் 26 AS) மற்றும் தவறவிட்ட வரி சலுகைகளையும் சேர்த்து 31 ஜூலை 2018 ஆம் தேதிக்குள் மின்னணு முறையில் படிவத்தை தாக்கல் செய்ய தனிநபர்க்கான பக்கத்தை அறிமுகபடுத்தவுள்ளோம்.

தொடர்புக்கு...

கிளை   :  2,வெங்கடாச்சலம் தெரு,பாரதி சாலை, திருவெல்லிக்கேணி,
சென்னை - 600 005.

    7358470131 / 132

23/1, அழகிரி நகர் 5 வது தெரு ,100 அடி சாலை, வசந்தபவன் உணவகம் அருகில், வடபழனி, சென்னை -600026.

044 48612242, 9962422242, 8610762639

www.tamiltds.com

சென்னை


  கே.எஸ்.குமார் - 8610762639

  குதுபுதீன் - 9840400757

  விஜய் குமார் - 9962422242

வேலூர்


  சந்தோஷ் - 9442293777

  தினேஷ் - 9788888294